Sunday, August 2, 2020

பசியைப் போக்கி ருசியை நீக்கும் பணிகள்

    ’தந்தையோடு கல்வி போம்; தாயொடு அறுசுவை  போம்;’ என்று தந்தையை கல்விக்கும் தாயை ருசிக்கும் முதற்காரணங்களாக நம் முன்னோர்கள் கூறினர். ஆனால் நவீன ஆராய்ச்சி முடிவு ஒன்று இன்றைய பணிச் சுமை  நாம் உண்ணும் உணவின் ருசியையே தெரியாமல் ஆக்கி விடுகிறது என்று அச்சுறுத்துகிறது.


    வித்தியாசமான ஆனால் விவரமாக இங்கிலாந்தில் மேற்கொள்ளப் பட்ட அந்த  ஆய்வின் முடிவுகள் இதோ:  - 60 % மக்கள் சாப்பிடும்போது சுவை என்னனென்றே தெரியாது என்று கூறியுள்ளனர். இதற்குக் காரணம் அவர்கள் வேலையில் ரொம்ப பிஸியாம்.


 - 79 % பேருக்கு அடிப்படை சுவையின் பெயர்கூடத் தெரியவில்லையாம்.


 - 88 % பேர் உணவு சாப்பிடும்போது இடையில் பிற பணி குறுக்கிடுகிறதாம்.


 - 93 % பேருக்கு உணவு உண்ண நேரப் பற்றாக் குறைபாடாம்... எப்படி இருக்கிறது கதை? 


    ’நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்ற பழமொழியை மறந்ததனால் உணவு சீரண மண்டலக் கோளாறுகள் பலவற்றை அனுபவித்து வருகின்றனர் பலர். அதிலும் உணவின் அடிப்படைச் சுவையைக் கூட உணர முடியாமல் போய்விடுவது கண்களை விற்று ஓவியம் வாங்கிய கதையாகப் போய் விட்டது.


     குறிப்பாக இன்றைய ‘பிஸி’ யான உலகில் வாழ்பவர்கள் பலர் உணவு சாப்பிடுவதே உடலுக்கு வலு சேர்க்க மட்டும்தான் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். உணவு சுவைககாகவும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.  ருசித்து சாப்பிடும் உணவு எளிதில் சீரணமாகிவிடும் என்பது மருத்துவ உண்மை.  எனவே இனிமேல் என்னதான் அவசரமான பணியாக இருந்தாலும் உணவுக்கென்று சற்று நேரம் செலுத்தி உணவை உண்டால் செரிமானம் ஆகும். 


    ஆனால், எல்லாக் காலங்களிலும் எந்த வேளையிலும் உண்ணும் உணவு செரிமானம் ஆக மூலிகைகள் உதவுகின்றன. குறிப்பாக வில்வம், அதிமதுரம், சீரகம், ஏலம் ஆகிய மூலிகைகள் செரிமானத்தை மேம்படுத்தி உணவை சீரணிக்க உதவுகின்றன. இம்மூலிகைகளை அன்றாடம் இனிய சுவையில் அனைவரும் சாப்பிடும் வண்ணம் ரூமி ஹெர்பல்ஸ் நிறுவனம் வில்வா என்ற பெயரில் ஓர் இனிய பானத்தையும் ஜீர்ணா என்ற பெயரில் கேப்சூல் ஒன்றையும் வழங்கி வருகின்றது. இவற்றைப் பயன் படுத்தி செரிமானத்தை மேம்படுத்தலாம்.

    குறிப்பாக வில்வா பானம் உண்டு வரும்போது எந்த உணவைச் சாப்பிட்டாலும் சீரணம் எளிதில் நடைபெறும். மேலும் வில்வா பானம் அருந்தி வரும்போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விடுபடலாம் என்கின்ற இனிய செய்தியும் கிடைத்துள்ளது. புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் வில்வாவின் மீது செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சி ஒன்று் புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்குகளை வில்வா பானம் அருந்தி விடுபடலாம் என்கின்றது.


    செரிமானப் பிரச்சினைகள், மலச்சிக்கல் உள்ளவர்கள், புகைப்பவர்கள் ஆகியோர்கள் வில்வாவைத் தொடர்ந்து பயன்படுத்திவர இயற்கையாக செரிமானம் பெறலாம். 








Contact - 9677009443 / 044 - 40194570



Instagram - Rohiniherbalaya




No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...