Tuesday, September 29, 2020

பல் போனால் சொல் போகும்...

  

                                    


ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு
 பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.

 

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? பல் மருத்துவர்கள் விரிவாக ஆலோசனை தருகிறார். 


பல்லின் அமைப்பு

.    "பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு  மொத்தம் 32 பற்கள் உள்ளன. 

    'பல் போனால் சொல் போகும்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும். 

 

வாய் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்கள்

1. பல் சொத்தை

2. நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். 

3. எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரண்டும் சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும். 

4. பல் கறைகள்

5. புகையிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது, மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது  போன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும்

6. சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்

7. பல் வலி

8. பல் சொத்தை வளர்ந்து பெரிதாகும்போது பல்லின் வேரைத் தாக்கும். அப்போது பல் வலி ஏற்படும்.

9. வாய் துர்நாற்றம் 

10. வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். 

11. அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும்

12. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். 

13. பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். 

14. சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

15. ஈறுகளில் வீக்கம்...

16. பற்கள் மீது பாக்டீரியாக்கள் படிவதால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். 

17. முறையாக பற்களைப் பராமரிக்காவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஈறுகள் வீங்கிவிடும். வைரஸ் கிருமி தொற்று, மனஅழுத்தம், சர்க்கரைநோய், குடிப்பழக்கம், புகையிலைப் பழக்கம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்

18. பற்கூச்சம்

19. எனாமல் தேய்வதாலும், அதிகக்  குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் பற்கூச்சம் ஏற்படும்.

 

பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!

- அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.

- சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.

- புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.

- குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால் பால் பற்களைப் பாதிக்ககூடும்

- பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பது போன்ற செயல்களால் பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.

- நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.

- சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்ககூடும்

- குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

- உணவு உண்ட பின்னும் குளிர்பானங்கள் அருந்திய பின்னும் வாய்    கொப்பளிக்க வேண்டும்.

- சாப்பிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக்கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்

- 'பாயில் இன்ஃபெக்சன்' ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.

- ஒரு நாளைக்கு  குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். 

- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூட் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

பல் மற்றும் ஈறுக்களுக்கு இடையே பிளாக் (Plaque) என்னும் மஞ்சள் நிறக் கறை படிந்து இருந்தாலோ பல் துலக்கும்போது அவற்றில் இருந்து ரத்தம் வந்தாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.

 

ரோஹிணி வழங்கும் தீர்வு






  • இயற்கை மூலிகைகள் அடங்கிய ரூமி குளோடென்ட் தினமும் இரண்டுமுறை பல் துலக்கி வர ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி பற்களை வலுப்படுத்திகிறது. நாவில் படியும் படலங்களைத் தடுத்து பற்களை வலிமை ஆக்குகிறது
  • மேலிம் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/glodent/






  • இயற்கை மூலிகைகள் கலந்த ரூமி ஹெர்பல் ஃப்ரஷ் தினமும் உணவருந்திய பின்பு பயன்படுத்தி வர வாய் துர்நாற்றத்தைப் போக்கி வாய்ப்புண்களை குணப்படுத்துகிறது. 
  •       மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/herbal-fresh/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி – 9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                        –  99401 27201

புதுச்சேரி                                                         –  94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்      –  94440 00837

பரமத்தி வேலூர்                                           –   93601 11119

திருநெல்வேலி                                             –   98421 52809

பெங்களூரு                                                     –   93795 55833

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 
 





No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...