Friday, September 25, 2020

தலைவலி எதனால் வருகிறது தெரியுமா?

 



தலைவலி  என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விளங்கும் “பெய்ன்கில்லர்’ எல்லாம், உடலுக்கு கேடானது.

 40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், “மைக்ரேன்’ என்று சொல்லப்படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.



இந்தக் காரணங்களால் கூட தலைவலி ஏற்படுமா!? 

வலிப்பும் ஒற்றைத் தலைவலியும் மூளையில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே. ஒற்றைத் தலைவலி இருப்பவர்களுக்கு வலிப்பும் வரலாம்.

 ·         டிரைஜெமினல் நியூரால்ஜியா

·     40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வு போல வலி இருக்கும்.

·    கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம்.

·         கண் தொடர்பான நோய்கள்

·    ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

·         பக்கவாதம்

·    இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது.

·    இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

·         தலைச்சுற்றல்

·    இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். உளவியல் ரீதியான பிரச்சனைகள்

·    மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

·         சைனஸ் தலைவலி

·    கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

·         பல் நோய்கள்

·    பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். 

·    குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும்.

·    மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

·         தைராய்டு குறைவு

·    தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்விடும்.

 

 

தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை

·    நேரத்தை சரியாக திட்டமிடவும். உறங்கவும், விழிக்கவும் நேரத்தை நிர்ணயிக்கவும்.

·    முறையான சத்தான சமச்சீர் உணவை உட்கொள்ளவும்

·    ஒழுங்கான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.

·    தலைவலியைத் தூண்டும் காரணிகளை அடையாளம் கண்டு தவிர்க்கவும்.

·    வலி ஏற்படும் சந்தர்ப்பம் மற்றும் சாத்தியமான தூண்டு காரணிகளைக் குறித்து வைக்கவும்

·    தூண்டு காரணிகளைக் கட்டுப்படுத்தினால், அதனால் பயன்படுத்தும் மருந்தின் அளவு குறையும்.

·    தரப்படும் மருந்துகளைத் தவறாமல் உட்கொள்ளவும்.

·    எரிச்சலூட்டும் உரத்த இரைச்சலைவிட்டு விலகி இருக்கவும்.

·    முடிந்தவரை வெயில்படாமல் ஒதுங்கி இருக்கவும்.

·    வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம்.

 

தலைவலி நீங்க ரோஹிணியின் தீர்வு




·     தினமும் ரூமி மைக்ரோசான் பயன்படுத்தி வர தலைவலி அறவே நீங்கும்

·     பலவித காரணங்களால் தோன்றும் தீரா தலைவலிக்கும் தீர்வளிக்கிறது

·     சைனஸ் பிரச்சனை மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்குகிறது

.     மேலும் மைக்ரோசான் பற்றிய விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/migrozen/  லிங்க் கிளிக் செய்து உள்ளே செல்லவும்


·     தினமும் ரூமி மைக்ரோசான் உடன் ரூமி ரிலாக்சான் தைலம் தடவிக்  கொண்டால் நீரேற்றம், ஜலதோசத்திற்கு நிவாரணம் அளிக்கிறது

.    மேலும் ரிலாக்சான்  பற்றிய விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/relaxon/  லிங்க் கிளிக் செய்து உள்ளே செல்லவும்


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி – 9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                        –  99401 27201

புதுச்சேரி                                                         –  94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்           –  94440 00837

பரமத்தி வேலூர்                                           –   93601 11119

திருநெல்வேலி                                             –   98421 52809

பெங்களூரு                                                     –   93795 55833

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 
 



2 comments:

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...