Thursday, July 22, 2021

கொழுப்புக்கு இனி வேலை இல்லை .. இதப்படிங்க முதல்ல !

 

கொழுப்பு:

கொலஸ்ட்ரால் என்றாலே, உடலுக்குக் கெடுதல் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (High-density lipoprotein), கெட்ட கொலஸ்ட்ரால் (Low-density lipoprotein) என இரு வகைகள் உள்ளன. குழந்தை கருவில் வளரும் போதே குழந்தையின் உறுப்புகள் வளரத்தொடங்கும் நிலையில் கொழுப்பு செல்களும் உருவாக தொடங்குகிறது. அதன்பிறகு அந்தக் குழந்தை பருவ வயதை எட்டியதும் அவர்களது பாலினத்துக்கேற்ப ஹார்மோன் தூண்டுதலில் அந்த உடல் நிலைக்கேற்ப கொழுப்பு படிய தொடங்குகிறது. சாதாரணமான வளர்ச்சியில் கொழுப்பு படிவத்தில் மாற்றம் இருக்காது. ஆனால் உடல் வளர்ச்சியில் உடல் எடையில் மாற்றம் இருக்கும் போது கூடுதல் கொழுப்பு படிவதற்கு வாய்ப்பு உண்டு.

அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளது எல்டிஎல் கொலஸ்ட்ரால். இது இதய ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் ஒட்டும் தன்மை உடையது; (இது கெட்டது) ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அடர்த்தி அதிகம் உள்ளது, (நல்லது) இது ரத்தக் குழாயின் உட்பகுதியில் ஒட்டாமல், புரதத்தோடு சேர்ந்து ரத்தத்தில் பயணிக்கும். நாள்முழுக்க உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும். நம் உடலில் எப்போதும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும். நொறுக்குத்தீனிகளைக் குறைத்து ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

கொழுப்பின் வகைகளும் இருக்க வேண்டிய அளவுகளும்:

உடலில் மொத்த கொழுப்பின் அளவு 200 மி.கி. அளவுக்கு மேல் செல்லும் போது மாரடைப்புக்கான வாய்ப்புகள் உருவாகிறது. அதே நேரம் ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்புகள் 35 மி.கிராமுக்கு குறைவாக இருந்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த நல்ல கொழுப்பு 50 மி.கிராமுக்கு அதிகரிக்கும் போது இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது. சுருங்க சொன்னால், ஆண்களுக்கு நல்ல கொழுப்பு என்பது 40 கிராமுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 25 கிராமுக்கு அதிகமாகவும் இருத்தல் வேண்டும்.

அதே போன்று கெட்ட கொழுப்பு 139 மி.கிராம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் இருபாலருக்கும் கெட்ட கொழுப்புகள் அதிகம் உடலில் தங்கி விடுவதோடு நல்ல கொழுப்புகளின் அளவும் குறைந்தே காணப்படுகிறது. இதனால் நடுத்தர வயதிலேயே இதய நோய் சம்பந்தமான பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.

கொழுப்பு இப்படித்தான் உருவாகிறது:

நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகி அதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொழுப்பு குடலில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய போது கொழுப்பை வெளிவிடவும், உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் கல்லீரலே செயல்படுகின்றது.

கொழுப்புக்கு என்ன வேலை:

கொழுப்பு உடலில் இருக்கும் செல்களைச் சீராக செயல்புரிய வைக்கும் பணியை செய்கிறது. பித்தநீர்சுரக்க உதவி புரிவதோடு உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே போன்றவற்றை இரத்தத்தில் கலக்க செய்கிறது. மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் துணை புரிகிறது. ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக்கு பயன்படுகிறது

பெரும்பாலும் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது மூன்று பகுதிகளில் அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும்.

கைகளில் வலி : தமனிகளின் உட்புறத்தில் கொழுப்புக்கள் குவிந்திருக்கும் போது, கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள், செல்லுலார் கழிவுப் பொருட்கள், கால்சியம் மற்றும் ஃபைப்ரின் ஆகியவற்றால் ஆன ஒரு கட்டி உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாகும் கட்டிகள் இரத்த ஓட்டத்தில் தடை மற்றும் இடையூறை ஏற்படுத்துகிறது. இது தான் பெருந்தமனி தடிப்பு அழற்சி என்னும் நிலையை உண்டாக்குகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் கைகளில் வலியை உணரக்கூடும்.

சருமத்தில் வளர்ச்சி : சருமத்தில் திடீரென்று மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் வளர்ச்சியைக் கண்டால், உங்கள் சருமத்தின் கீழ் கொழுப்புக்கள் தேங்கி இருக்கலாம். ஒருசிலருக்கு கண்களின் கீழே கோடுகளைக் காணலாம். இந்த வலியற்ற தேக்கங்கள் உங்கள் உள்ளங்கைகளிலோ அல்லது உங்கள் கால்களின் பின்புறத்திலோ தென்படலாம். இம்மாதிரியான வளர்ச்சிகளை நீங்கள் உங்கள் உடலில் கண்டால், உடனே ரோஹிணி மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

நீல நிற வளையம் : சிலருக்கு, கார்னியாவின் வெளிப்பகுதிக்கு மேலேயும், கீழேயும் நீல நிற அல்லது சாம்பல் நிற அல்லது வெள்ளை நிற வளையம் நன்கு தெளிவாக காணப்படும். இந்நிலை "ஆர்கஸ் செனிலிஸ்" என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது வயதானதற்கான ஒரு சாதாரண அடையாளமாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்நிலை 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் போது, இதற்கு ஹைப்பர்லிபிடெமியா காரணமாகும் மற்றும் இது பெரும்பாலும் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது.

கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகள்

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் வயது பேதமின்றிஅடிமையாகி கிடப்பது கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகளின் மீதுதான். கடைகளில்கொழுப்பில்லாத உணவு வகைகள் என்று குறிக்கப்பட்டிருக்கும் பாக்கெட் உணவு பொருள்களிலும் அதிகப்படியான சர்க்கரையும், கலோரியும் இணைந்து உடலுக்கு கேடையே தரும் என்பதை மறந்து விடுகிறோம். வேகவைத்த காய்கறிகளின் இடத்தை நீக்கமற நிறைத்திருக்கும் எண்ணெயில் வறுத்த, பொரித்த அசைவ மற்றும் க்ரிஸ்பி உணவுகள் அனைத்துமே உடலில் அதிக கொழுப்புகளை உண்டாக்கி அதை வெளியேற செய்யாமல் உடல் பருமனுக்கு உள்ளாக்கிவிடுகிறது. இவை தவிர ஐஸ்க்ரீம், பேக்கரி வகைகள், தொடர்ந்து சாக்லெட், வெள்ளை சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி, ஆடு,மாடு, பன்றி இறைச்சி வகைகள் (அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுக்கும் போது) போன்றவற்றை எடுக்கும் போது இதிலிருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் வேகமாக கொழுப்பாக மாறி இரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை மிகுதியாக்கிவிடுகிறது.

 

மாற்றுவழி இல்லையா?

முக்கியமானது, நம் வாழ்க்கை முறை.

* ரோஹிணி ஆரோக் மூலிகை சுடுபானம் தினமும் அருந்துவது

* வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்புப் பயன்பாட்டைக் குறைப்பது,

* முழுத் தானிய உணவு வகையை உண்பது,

* துரித உணவு வகையைத் தவிர்ப்பது,

* அதிக கொழுப்புள்ள இறைச்சி/ எண்ணெய் வகையைக் குறைப்பது,

* மீன், காய்கறி, பழங்கள், கொட்டை உணவு வகையை அதிகம் உண்பது,

* பேக்கரி உணவையும் நொறுக்குத் தீனியையும் தவிர்ப்பது,

* புகைப்பதை நிறுத்துவது,

* மதுவை மறப்பது,

* மன அழுத்தம் குறைப்பது,

* தேவையான ஓய்வு எடுப்பது,

* நடைப்பயிற்சி /யோகா/ தியானம் மேற்கொள்வது

இதுபோன்ற ஆரோக்கிய வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே கடைப்பிடித்தால் கெட்ட கொலஸ்டிராலுக்கு ரத்தத்தில் இடமில்லாமல் போகும். நல்ல கொலஸ்டிரால் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.




ஆரோக்

மூலிகைத் தேநீர்

1. தாமரை கலந்த ஆரோக்கிய மூலிகை சுடுபானம்

2. இதய சுழற்சியை முறைப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது

3. உடலின் தேவையற்ற கொழுப்புகளை எளிமையாக நீக்குகிறது
தொடர்ந்து அருந்தும்போது மன அழுத்தத்தையும், மனஇறுக்கத்தையும் நீக்குகிறது

4. தாமரை, ரோஜா, செம்பரத்தைப் பூ, மாசிக்காய், அதிமதுரம், கரிசலாங்கண்ணி ஆகிய மூலிகைகள் அடங்கியது


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 




No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...