Saturday, July 24, 2021

மூட்டுவலி போயே போச்சு .. படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

 


இன்றைய பரபரப்பான சூழலில் நோய்களுக்குப் பஞ்சமில்லை. சற்று வயதாக ஆரம்பித்தாலே நோய்கள் தேடி வருகின்றன. அந்த வகையில் இப்போது வயதானவர்கள் என்றில்லை வயதுவித்தியாசமின்றி  மூட்டுவலியால் பாதிக்கப்படுகின்றனர். நமது உடலில் எலும்புகள் இணையும் இடம்தான் மூட்டு. இதில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவையாகும்.

 

வலி எதனால் வருகிறது?

'மூட்டுவலி" வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக்கொள்கிறோம். வயதாகும்போது, உடல்சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல.

உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரைநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு  மூட்டுவலி இருக்கும்.

சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள்பட்டை, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம்.

இவற்றில் பொதுவாக அதிகமானோரைப் பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டை வலி.  நீண்டநாள் (Chronic) பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டு வலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும்.

எனவே, முதல்நிலையிலேயே பிரச்சனையைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்களைச் செய்வது, சிகிச்சை போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரம் குறைக்கலாம்.

உதாரணமாக, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை சரியாகச்  செய்யவேண்டும். அதேநேரம், எந்தெந்த உடல் அசைவுகளைத் தொடர்ந்து செய்தால் பாதிப்பு அல்லது வலிஉணர்வு அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி உட்கார்ந்து எழுவது, படிக்கட்டுகளில் அதிகம் ஏறுவதால் வலி எடுத்தால் அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

 

பாதிப்புகள் என்ன?

  1. உடலின் உள்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்,

  2. ஆர்த்ரைட்டிஸ் (arthritis) என்ற மூட்டு வீக்கம்

  3.  முடக்குவாதம்

  4. எலும்பில் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது

  5. எலும்ப்புப்புரை (Osteoporosis)

  6. எலும்பு நோய் (Rickets)

  7. எலும்பைச் சுற்றியுள்ள இணைப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது

  8. 'ஹெபடைட்டிஸ்' போன்ற தொற்றுநோய் பிரச்னைகள்

  9. மூட்டில் கடுமையாக வலி எடுப்பது, எலும்பு வீக்கம், கௌட் (gout) போன்றவையும் மூட்டுக் கோளாறைக் குறிக்கும்

  10. கை, கால்மூட்டுகள் மற்றும் உடலில் இரண்டு எலும்புகள் கூடும் இணைப்புகளில் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வு இருந்தால் அது ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையாக இருக்கக்கூடும். தேய்மானம், 'முடக்கு வாதம்' (Rheumatoid arthritis) பாதிப்பு மற்றும் 'சர்விக்கல் ஸ்பாண்டுலோசிஸ்' (Cervical spondylosis) ஆகியவை மிகவும் பிரதானமான பாதிப்புகள்

 

அறிகுறிகள் என்னென்ன? 

·        மூட்டு வீக்கம்

·        மூட்டுப்பகுதியில் சூடான உணர்வு

·        மூட்டு சிவந்து காணப்படுவது

·        ஒரு வாரத்துக்கும் மேலான தீவிர மூட்டுவலி

·        படிக்கட்டுகளில் ஏற மிகவும் சிரமப்படுவது

 

செய்யவேண்டியவை

  • நீங்கள் சோர்வாக உணரத் தொடங்கும் போது பிற்பகலில் குறைந்தது 1 மணிநேரம் ஓய்வெடுக்கவும்
  • வலியைக் குறைக்க ஐஸ் பையைப் பயன்படுத்துங்கள்
  • உடற்பயிற்சியின் முன் தசைகள் ஓய்வெடுக்க ஒரு சூடான குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்
  • வீக்கம் குறைந்தவுடன் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்யுங்கள்
  • ஆடை, குளியல், சமையல், வேலை மற்றும் பிற செயல்பாடுகளுக்கு உங்களுக்கு உதவ கிடைக்கக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்துங்கள்
  • உங்கள் பணிகளை எளிதில் முடிக்க வீட்டிலும், வேலையிலும் உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்யுங்கள்

செய்யக்கூடாதவை

  • நீண்ட நேரம் படுக்கையில் இருக்க வேண்டாம்
  • அதிக உடற்பயிற்சி வேண்டாம்
  • சிறிய அளவில் தினசரி உடற்பயிற்சி செய்வது சிறந்தது
  • தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்
  • தவறாமல் உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்
  • நாள் முழுவதும் வீட்டில் இருக்க வேண்டாம்; நீங்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், தன்னார்வலராக அல்லது கிளப்பில் (Club) சேரவும்
  • உங்கள் உடல்நலம் குறித்த உங்கள் அச்சங்களையும் கவலைகளையும் அல்லது சோகம் அல்லது மனச்சோர்வின் உணர்வுகளையும் நீங்களே வைத்திருக்க வேண்டாம். குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.


மெக்னி - மூலிகை வலிநிவாரணி



1.மூலிகை வலி நிவாரணத் தைலம்

2.மூட்டுவலி,  வீக்கம் இவற்றை நீக்குகிறது

3.இரத்தக்கட்டு, தாபிதம் இவற்றை வலியின்றி கரைக்கிறது

4.பிரண்டை, ஜாதிப்பத்திரி, இஞ்சி மூலிகைகள் சேர்ந்தது

5.மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/megni/


      ஆர்த்திரிட்டோ   இயற்கை மூட்டுவலி கேப்சூல்



1.மூட்டுகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது

2.வலி மற்றும் அழற்சியின் காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது

3.வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

4.கடுக்காய்த்தோல், குக்குலு, நீர்முள்ளி, அமுக்கிராக்கிழங்கு ஆகிய மூலிகைகள் அடங்கியது

5. மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/arthrito/



                ஹெர்போமால்ட்   மூலிகை உணவு



1.அனைத்து வயதினருக்கும் தேவையான ஆரோக்கிய பானம்

2.உடலுக்கு வன்மையளிக்கும் அமுக்கிராக்கிழங்கு சேர்ந்த பானம்

3.எலும்புகள் தேய்மானத்தை தடுத்து, மூட்டுவலி வராமல் பாதுகாக்கிறது

4.முளைக்கட்டிய பாசிப்பயறு, மூக்கடலை, கேழ்வரகு, மக்காச்சோளம், அமுக்கிராக்கிழங்கு, கோதுமை ஆகிய மூலிகைகள் அடங்கியது

5. மேலும் விவரங்களுக்கு 

http://rohiniherbalaya.com/product/herbomalt/


தொடர்புக்கு : 

ரோஹிணி குளோபல் மார்க்கெட்டிங் பி. லிட்.,
327, 4வது குறுக்குத் தெரு, மோகன்ராம் நகர், முகப்பேர் கிழக்கு,
சென்னை - 600037

தொலைபேசி
 
9677009443 / 044 – 40194570

கிளை எண்கள் : 

சென்னை                                                               99401 27201

புதுச்சேரி                                                                94421 29890

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர்              94440 00837

பரமத்தி வேலூர்                                                 93601 11119

திருநெல்வேலி                                                   98421 52809

பெங்களூரு                                                          93795 55833

மதுரை                                                                   8903421490

 

சமூக வலைதளங்கள் : 

 
 
Instagram – Rohiniherbalaya
 
 
Blog – Rohini global 

Twitter - @rohiniherbalaya


Pinterest - rohiniherbalaya
 








No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...