Monday, August 2, 2021

சொல் ஆட பல் வேண்டும்! இதப்படிங்க முதல்ல..

 
பல்லாண்டு வாழ, பல்லை நாம் ஆண்டு வாழ வேண்டும்

பல் சொத்தை

பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என எல்லோரையும் இது பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், இனிப்புகளை அதிகமாகச் சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் தவறினாலும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, பான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது போன்ற பழக்கங்களால் பற்களில் காரை படியும். இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை விழுந்து, பற்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும்.

குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் பல் சொத்தை வரலாம்.

அறிகுறி என்ன?

சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். பிறகு பல்லில் வலி ஏற்படும். உணவை மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

தடுக்க வழி

# காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க வேண்டும். மேல் தாடைப் பற்களைக் கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.

# கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.

# பல் துலக்கியைப் பொறுத்தவரையில், மிருதுவான அல்லது நடுத்தர வகை பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் பாதுகாப்புக்கு நல்லது.

# ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான விரல்யைப் பயன்படுத்தி, ஐந்து வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.

# குழந்தைக்குப் பாட்டிலில் பால் கொடுத்தவுடன், ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

# தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்

# வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

# பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

# காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு வகைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

# வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

# குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.

# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் எனாமலை தாக்கிப் பற்களையும் சிதைக்கின்றன.

# குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

# தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.

# நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை உண்டுபண்ணும்.

# ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.
 

வாய் துர்நாற்றம்

நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம் போய்விடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சுத்தமாக பல் துலக்கினாலும் வாய்துர்நாற்றம் வரும். காரணம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் என்பது வாயோடு மட்டுமே தொடர்புடையது அல்ல

வாய் மட்டுமல்ல, வயிற்றில் பிரச்னைகள் இருந்தாலும் வாய்நாற்றம் உண்டாகும். 10 சதவீதம் பேருக்கு மற்ற உடல் பிரச்னைகளான நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னைகளால் வாய் துர்நாற்றம் வருகிறது. வயிற்றில் அல்சர் இருப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும் வாய்ப்புகள் அதிகம்

தடுக்கும் வழி

# சாப்பிட்டுவிட்டு 2 அல்லது 3 மூன்று மணிநேரம் கழித்து தூங்கச்செல்ல வேண்டும்.

# ஒருநாளில் மூன்றுவேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, எளிதில் செரிக்கக்கூடிய வகையில் அதை பலவேளைகளாக பிரித்து சாப்பிடலாம்

# வாய் துர்நாற்றம் போக சூயிங்கம் அல்லது இதற்கென்றே விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம்.

# மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடல் சிறந்தது.

# வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம்.

# நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

# அதிக தண்ணீர் குடிக்கவேண்டும். இது வயிற்றிலுள்ள நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
 
பல் சிதைவு

பல் சிதைவு அறிகுறிகள்
1. பல் வலி
2. இனிப்பு, சூடான அல்லது குளிர் பானங்கள் சாப்பிடும் போது வலி

பல் கூச்சம்

பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கு பாதிப்பல் உடைந்திருக்கும் பட்சத்தில் கூச்சம் ஏற்படும். இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம். ஒரு வேளை ஏற்கெனவே பல் சொத்தை ஏற்பட்டு, அந்த சொத்தையை சில அடைத்திருப்பார்கள். அந்த அடைப்பு உடைந்திருந்தால் கூட கூச்சம் ஏற்படலாம்.

சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை மற்றும் உணவுக்குழாய்  (Gastroesophageal reflux disease) சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். இதனால் அதிக அமில சுரப்பு காரணமாக பல் கூச்சம் ஏற்படலாம். அதிக அமிலம் சார்ந்த உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதன் காரணமாக கூட பல்லின் கூச்சம் ஏற்படலாம். சிலர் பல் விளக்கும் முறை கடினமாக இருக்கும். அவர்கள் பயன்படுத்தும் பிரஷ் மற்றும் முறை காரணமாக பல்லில் தேய்மானம் ஏற்படலாம்.

என்ன செய்யலாம்?
Extra soft bristle பிரஷ்-யை பயன்படுத்தலாம். சிறிதளவு சுடு நீரில் உப்பு போட்டு கொப்பளிக்கலாம். ஆனால் நொடிகளுக்கு மேல் கொப்பளிக்க வேண்டாம். அதேபோல சுடு தண்ணீரில் தேன் கலந்தும் கொப்பளிக்கலாம். மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடான பானங்களை அருந்துவதை தவிர்க்கலாம்.  இவை அனைத்தும் தற்காலிகான தீர்வுகள்தான்.

சிலருக்கு பல்லில் மஞ்சள் கறை இருக்கும். இவற்றை நீக்க வேண்டும் என்பதற்காக teeth whitening செய்வார்கள்.  இதனைச் செய்யும் போது பல்லின் எனாமல் தேயும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேவையில்லாமல் teeth whitening  செய்வதை தவிர்க்கலாம்.
பல் ஆடுதல்

பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?

உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம்.
மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம் பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும்.  எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும்
 
பல் நிறம் மாறுதல்
 
காரணங்கள்
பற்களை நன்கு சுத்தம் செய்யாமல் இருத்தல்
சில உணவு உட்கொள்ளும் பழக்கங்களால் பற்களை கரைப்படுத்தும்
புகை பிடித்தல்
பான் மசாலா சுவைத்தல்
பல் ஈறுகளில் ஏற்படும் நோய்தொற்றுகள்
பற்கள் மற்றும் தாடை எலும்புளில் ஏற்படும் முறிவு
வைட்டமின் சி மற்றும் டி பற்றாக்குறை
சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை
குடிக்கும் தண்ணீரில் அதிகளவு ஃப்ளோரின் எனப்படு வேதிப்பொருள் இருத்தல்.
பற்சொத்தை அல்லது பற்சிதைவு

முன்னெச்சரிக்கைகள்
ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் - காலை (தூங்கி எழுந்த உடன்) மற்றும் இரவு (படுக்கைக்கு செல்வதற்கு முன்)
- ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வாயினை சுத்தமான தண்ணீர் கொண்டு தூய்மை செய்ய வேண்டும்.
- சரியான பற்பசையினை (மூலிகைப் பவுடர்) பயன்படுத்த வேண்டும்.
- சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும்.
- புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- வருடத்திற்கு ஒரு முறையாவது, பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
 
பல் வலி

வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் பல் வலி. ஒருவருக்கு பல் வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் அல்லது ஈறுகளில் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும். இந்நிலையில் கடுமையான மற்றும் கூர்மையான பல் வலியால் அவஸ்தைப்படக்கூடும்.

ஒருவரது வாய் சுகாதாரம் மோசமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள்.
 
ஈறு வீக்கம்

உங்கள் ஈறுகள் வீக்கம் அடைந்திருந்தாலோ அல்லது பற்களை துலக்கும்போது இரத்தகசிவு இருந்தாலோ உங்களுக்கு பல் ஈறு வீக்கம் ஏற்பட்டிருக்கலாம். பல் ஈறு வீக்கம் உண்டாவதற்கான மிகவும் பொதுவான காரணம் சுகாதாரமற்ற வாய் பகுதி ஆகும். தினமும் பல் துலக்குவதும் மற்றும் பல் இடுக்குகளை சுத்தம் செய்தல் போன்ற நல்ல வாய் சுகாதார முறைகளால் பல் ஈறு ரணம் உண்டாவதை தவிர்க்க உதவும்

அறிகுறிகள்:

- வீங்கிய ஈறுகள்
- மிருதுவான ஈறுகள்
- சில சமயம் தொட்டால் வலிக்கும் ஈறுகள்
- வாய் துர்நாற்றம்
- ஈறுகளின் நிறம் ஆரோக்கியமான இளம்சிவப்பு நிறத்திலிருந்து மங்கிய சிவப்பு நிறமாக மாறுவது.




குளோடென்ட்

இயற்கை மூலிகைகள் அடங்கிய பற்பொடி



-     -     ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி, பற்களை வலுப்படுத்துகிறது
-     பல் வலியிலிருந்து முழு நிவாரணம் அளிக்கிறது
-     நாவில் படியும் படலங்களைத் தடுக்கிறது
-     கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், கிராம்பு ஆகிய மூலிகைகள் அடங்கியது
     - மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/glodent/


ஹெர்பல் பிரஷ்

இயற்கை வாய் நறுமணமூட்டி


      - இயற்கை மூலிகைகள் கலந்த வாய்ப் பாதுகாவலன்
- வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது
- வாய்ப்புண்களை குணப்படுத்துகின்றது
- ஈறுகளை வலுப்படுத்துகிறது
- கடுக்காய், ஜாதிக்காய், மாசிக்காய், புதினா, இந்துப்பு ஆகிய மூலிகைகள் அடங்கியது
- மேலும் விவரங்களுக்கு 
http://rohiniherbalaya.com/product/herbal-fresh/
 

 



No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...