Wednesday, August 4, 2021

ஸ்பைருலினா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதப்படிங்க முதல்ல




பலரும் ஸ்பைரூலினா பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்பைரூலினா என்பது ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. இதன் முழுமையான பயன்களையும், சக்தியையும் முன்னரே அறிந்திருந்தால், இன்று நம்மைத் தாக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகம் உள்ளது. அதனால் தான் இது பச்சை நிறத்தில் உள்ளது. மேலும் இது இந்தியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி. இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான், மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம்.

இதனை தினமும் சிறிது எடுத்து வந்தால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்து, உடலை நோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். சரி, இப்போது ஸ்பைரூலினாவை தினமும் சிறிது சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

புரோட்டீன்கள்

புரோட்டீன்கள் ஸ்பைரூலினாவில் 60-70 சதவீத புரோட்டீன்கள் உள்ளன. அதாவது பால், முட்டை மற்றும் பருப்பு வகைகளை விட அதிகமான அளவிலான புரோட்டீன்கள் ஸ்பைரூலினாவில் உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் புரோட்டீன் குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கனிமச்சத்துக்கள்

கனிமச்சத்துக்கள் ஸ்பைரூலினாவில் உடலுக்கு தேவையான மைக்ரோ கனிமங்கள் மற்றும் மேக்ரோ கனிமங்கள் வளமாக உள்ளன. அதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஜிங்க் மற்றும் குரோமியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக இதில் பாலை விட அதிகமான அளவில் கால்சியம் உள்ளது.

உடல் சுத்தமாகும் 

ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகமான அளவில் உள்ளது. இது உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் சிறிது ஸ்பைரூலினாவை உட்கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் 

உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறிவிட்டால் தானாக நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்தால், உடலைத் தாக்கும் கிருமிகளில் இருந்து உடல் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

புத்துணர்ச்சி அளிக்கும் 

ஸ்பைரூலினாவை தினமும் உட்கொண்டு வந்தால், நாள்பட்ட களைப்பைப் போக்கி, நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

ஸ்பைருலினா ப்ளஸ் 
மூலிகை கேப்சூல்



புரதம், இயற்கை வைட்டமின் சி நிறைந்த ஊட்டச்சத்து கேப்சூல்
காயகல்ப மூலிகைகள் அடங்கியது

உடலைத் தேற்றுவதற்கும் நோயிலிருந்து உடல் இயற்கை நிலைக்கு திரும்புவதற்கும் பெரிதும் உதவுகிறது

இயற்கை உடல் தேற்றி செய்கையுடைய அமுக்கிரா சேர்ந்தது

மேலும் விவரங்களுக்கு http://rohiniherbalaya.com/product/spirulina-plus/













No comments:

Post a Comment

செரிமானப் பிரச்சனையா? இதோ தீர்வு!

ஜீரண மண்டலம் உடலின் அற்புதமான, அதிசயமான ஒரு பகுதி. பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாமல் பல்வேறு இயக்கங்களைச் செய்கிறது.  அதிகக் காற்றை விழுங்...